Friday 5 December 2014

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

          தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2


மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள்.
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல்
மார்ச் 18: கணிதம்,
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல்,
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல்,
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.

         தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



மதுரையைச் சேர்ந்த எஸ்.ஷோபனா, எல்.தீபால் ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:

தமிழக பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் தொழிற்பாடப் பிரிவாக கணினி அறிவியல் பாடம் 1984-85-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இப் பாடப் பிரிவுகளுக்கு கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறையால் இடைக்கால விதிகள் கொண்டுவரப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கணினி அறிவியல் பாடத்தை இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் போல பிரதானப் பாடமாக 2004-இல் தமிழக அரசு கொண்டு வந்தது.

அதேநேரம், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய சிறப்பு விதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்கள் இன்னும் கணினி பயிற்றுநர்கள் என்று தான் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சிறப்பு விதிகளின் அடிப்படையில், குறைவான கல்வித் தகுதி உடையவர்களே நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கை, மேற்படி பணிக்குத் தகுதியுடையவர்களின் உரிமைகளை மறுப்பதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது.

கணினி பயிற்றுநர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகக் கருத வேண்டும். மேலும், அந்தப் பணியிடத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

ஆகவே, இடைக்கால விதிகளின்படி, கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், இதற்குப் பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து வகுப்புக்கு செல்லவேண்டும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேச்சு

ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புக்கு செல்லவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உதவி கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழ்நாட்டில் உள்ள உதவி கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாக பயிற்சி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 02/12/2014 அன்று நடைபெற்றது. முதல் கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உதவி கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் உதவி கல்வி அதிகாரிகளுக்கான கையேட்டை வெளியிட்டுபேசியதாவது:-மாணவர்கள் 8-வது வகுப்பு வரை ஒழுக்கமாக இருந்தால் தான் அவர்கள் உயர்கல்வி படிக்கும்போதும், பின்னர் வாழ்க்கையிலும் ஒழுக்கமாக வாழ்வார்கள். எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியவர்கள் மாணவர்கள்தான்.அவர் களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களை தமது குழந்தைகளாக பாவிக்கவேண்டும்.இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
முதன்மை செயலாளர் த.சபீதா
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசியதாவது:-பள்ளிகளின் தரம் உயர வேண்டும், கல்வித்தரம் உயரவேண்டும் ஆகிய இரண்டையும் குறிக்கோள்களாக முதல்-அமைச்சர் கொண்டுள்ளார். கல்வித்துறையில் தமிழகம் சர்வதேச அளவில் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்று நினைத்து, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு தடை ஏற்படக்கூடாது என்று எண்ணி, பாடப்புத்தகம் முதல் மடிக்கணினி வரை 14 வகையான விலை இல்லா பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். அதன்படி அந்த 14 வகையானபொருட்களும் விலை இல்லாமல் பள்ளிக்கூடம் திறக்கும் நாள் அன்றே வழங்கப்படுகிறது. அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.உள் கட்டமைப்பு வசதிபள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிக்கு மட்டும் ரூ.2ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி கல்வி அதிகாரிகளுக்கு பொறுப்பு நிறைய உள்ளது. நீங்கள் பொறுப்பாக உங்கள் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும். அதனால் மற்ற ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவார்கள்.அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து அரசின் விலை இல்லா திட்டங்கள் போய்ச்சேர்ந்துள்ளதா? என்று சோதனை செய்ய வேண்டும். மாணவர்கள் எந்தபாடத்தில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களை கல்வி கற்பிக்கவைக்க வேண்டும். பலவீனமான மாணவர்களுக்கு அந்த பாடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சியை மாணவர்கள் அனைவரும் அடைய ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும். அதை உதவி கல்வி அதிகாரிகள் கண்காணித்து ஏற்பாடுசெய்ய வேண்டும். மாநில கல்வி வாரியம் அல்லாத சி.பி.எஸ்.இ. உள்ளிட்டஅனைத்து வாரிய பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணியமான முறையில் உடை
ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதாது, கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புகளுக்குச் செல்லவேண்டும். அவர்களை பார்த்துதான்மாணவர்கள் நடப்பார்கள். அதனால் ஆசிரியர்கள் எப்படி கண்ணியமாக நடக்கவேண்டுமோ அப்படி நடக்க வேண்டும். அத்தகைய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.இவ்வாறு த.சபீதா பேசினார்.
பூஜா குல்கர்னி
முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உள்பட பலர் பேசினார்கள்.இணை இயக்குனர்கள் கருப்பசாமி, தர்ம.ராஜேந்திரன், கார்மேகம், பழனிச்சாமி, லதா, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடக்கத்தில் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்.

Wednesday 26 November 2014

வலைதள பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்

Tuesday 11 November 2014

Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 6 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்- தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.

நீதிமன்றம் புதிய உத்தரவு

GO 71 மற்றும் GO 25 ஆகியவற்றை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர் இதில்  67 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு 6 வாரகாலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இறுதி தீர்ப்பை பொறுத்து பணிநியமனங்கள் அமையவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.